பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/105

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

103


வலிய அழைத்து அந்தச் சங்கங்கள் உறுப்பினராக்கி அவரது முயற்சியை ஊக்குவித்ததுதான் காரணமாகும்.

அத்துடன் அவர் ஒரு பிறவி தொழிலியல் விஞ்ஞானியாகத் திகழ்ந்தவராக இருந்தார் என்பதாலும், சிறந்த தொழிற் பிரமுகராக விளங்கியதாலும், திறமையான தொழிற்துறை மேதையாக உலகைச் சுற்றி வந்த அனுபவத்தைக் கண்டதாலும் மேற்கண்ட சங்கங்கள் நாயுடுவைத் தங்களது சங்கங்களில் உறுப்பினர்களாக்கிக் கொண்டு அவருடைய அறிவுரைகளைப் பின்பற்றி வந்தன.

அமெரிக்கா சென்று அங்குள்ள கைத் தொழில் பள்ளியில் மாணவராகப் பயிற்சி பெற்ற நாயுடுவின் அனுபவத்தையும், காலத்தைக் கடந்து எதையும் சிந்திக்கும் தொழில் விஞ்ஞானச் சிந்தனையாளர் அவர் என்பதாலும், ஜி.டி. நாயுடுவுக்கு இந்தியாவில் புகழ் பெருகியது.

ஜி.டி. நாயுடு தொழில் துறையில் முன்னேறிய நாடுகளையும் - நகரங்களையும் சுற்றிச் சுற்றிப் பார்த்த அனுபவமும் பெற்றிருந்தார்.

உலக நாடுகளின் புதுமையான தொழில் வளர்ச்சிகளை அவர் நேரில் பார்த்து அறிந்தவர், அனுபவமுள்ளவர், என்று இந்தியத் தொழிற் சங்கங்களால் பாராட்டப்பட்ட ஓர் அதிசய மனிதராகவும் திகழ்ந்தவர்.

கோவையைத் தொழிலறிவு
நகரமாக்கியது - ஏன்?

ஒரு முறைக்கு மூன்று முறையாக உலக நாடுகளைச் சுற்றி வந்த தனது தனித் திறமையைக் கொண்டு, ஜி.டி. நாயுடு கோயம்புத்தூர் நகரில் எண்ணற்ற தொழிற் சாலைகளை உருவாக்கினார்

உருவாக்கியதுடன் நில்லாமல், அந்தத் தொழிற்சாலை நிருவாகங்களை மற்றவர்கள் பார்த்து வியக்குமாறும் அவற்றை நடத்திக் காட்டினார் ஜி.டி. நாயுடு.

மேற்கண்ட தொழிற்சாலைகளைக் கோவை நகரில் உருவாக்குவதற்கு முன்பு, அந்த நகர் தொழிற்துறை அறிவோ.