பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

13


நிறுவனத்துக்கும், 200-க்கும் மேற்பட்ட பேருந்துகளுக்கும், முதலாளியாக உயர முடிந்தது. அத்துடன் அந்த மனித குல நேயர், தொழிற் சங்கத் தலைவராகவும் நியமனமாகி முன்னேற முடிந்தது.

நாயுடு கண்டுபிடித்த :
அற்புத சாதனைகள்

முகம் சவரம் செய்யும் ரேசண்ட் என்ற பெயருடைய பிளேடு ஒன்றை ஜி.டி. நாயுடு கண்டு பிடித்தார். அந்த பிளேடு 200 முறைகள் முகச் சவரங்களைத் தொடர்ந்து செய்யும் கூர்மை பெற்றதாக இருந்தது. ஏறக்குறைய 2 ஆண்டுக்களுக்கு அந்த பிளேடு முக சவரம் செய்யுமாம்!

அப்படிப்பட்ட அற்புத பிளேடு ஒன்றை இதுவரை உலகத் தால் கண்டுபிடிக்கப்பட முடியவில்லை என்றால், ஜி.டி. நாயுடுவின் விஞ்ஞான ஆய்வுத் திறத்தின் திறமை எவ்வளவு நுட்பமானது என்று எண்ணிப் பார்ப்போருக்குத்தான் உண்மை புரியும்.

ஒலி சமனக் கருவி என்ற ஒன்றக் கண்டுபிடித்தவர் ஜி.டி நாயுடு. அதை ஆங்கிலத்தில் Distance Adjuster என்பார்கள். அதன் விவரத்தை உள்ளே உள்ள பகுதிகளில் படித்துப் புரிந்து கொள்ளுங்கள்.

எடிசன் கைவிட்ட
ஒட்டுப் பதிவு இயந்திரம்!

இந்தியா முழுவதும் நடைபெறும் தேர்தலில், மக்கள் வாக்குகளைப் பதிவு செய்யும் இயந்திரங்களைப் பயன்படுத்தப் போவதாக, இந்தியத் தேர்தல் அதிகாரிகள் இப்போது மிகப் பெரு மிதத்தோடு கூறுகிறார்கள். ஏதோ ஒரு புதிய விஞ்ஞானக் கருவியைப் பயன்படுத்தபோவது போல மக்களிடம் பிரச்சாரம் செய்கிறார்கள்.

வாக்குப் பதிவு செய்யும் இந்த இயந்திரத்தை, அதாவது vote Recording Machine என்ற மின்சாரக் கருவியை, ஜி.டி. நாயடு 50 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்து உலகுக்கு வழங்கினார். அதை அப்போதைய இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டு விட்டன. இப்போது அதே ஒட்டுப் பதிவு இயந்திரத்தைத் தேர்தல்களிலே பயன்படுத்தப் போவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.