பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/155

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

153


வேண்டும். அதே நேரத்தில் உங்களைச் சார்ந்து, நம்பி இருப்போர் வாழ்க்கையையும் நீங்கள் மேம்படுத்த வேண்டும்.

மாணவர்கள் நிறையக் கற்பதற்கும், உங்களுடைய வாழ்க்கையை முன்னேற்றிக் கொள்வதற்கும், உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் இதுதான் தக்க பருவம் என்பதை நீங்கள் உணர வேண்டும்.

உலகில் வாழ்ந்த மிகப் பெரிய தலைவர்களுடைய வாழ்க்கையை, வரலாற்றை எல்லாம் நீங்கள் படிக்க வேண்டும். அவர்களில் கல்லூரிப் பட்டங்கள் பெற்றவர்களும் உண்டு, பெறாதவர்களும் இருப்பார்கள்.

ஆனால், அவர்கள் அறிவைத் தேடி உழைத்திட ஓடியவர்கள் என்பதை எவராலும் மறுக்க முடியாது. அத்தகையவர்கள் தான் மனித சமுதாயத்திற்கும் வழிகாட்டிகளாக வாழ்ந்தவர்கள் என்பதை எவராலும் மறக்க முடியாதவர்கள் ஆவர்.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெவின் என்பவர் இந்தியா விற்கு வருகை தந்தார். அவர் போர்க் காலத்தில் நமது நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் சிலருக்கு, இங்கிலாந்தில், குறுகிய நாட்களில், தொழில் பயிற்சி அளிப்பதற்கு ஒரு திட்டத்தை வகுத்தவர். அவருடைய வாழ்க்கை வரலாற்றைக் கூறுவதானால், நீண்ட நேரமாகும்.

உழைப்பால் உயர்ந்தோர்
வரலாறுகளைப் படியுங்கள்!

அந்த பெவின், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு பெரிய கட்சியின் தலைவராகவும், அந்த நாட்டின் அமைச்சராகவும் இருந்தவர். அவர் தனது பள்ளிப் படிப்பை முடித்ததும், தாமே முயன்று ஓயாமல் உழைத்து முன்னேறினார்.

அமெரிக்கரான ஹென்றி ஃபோர்டு என்பவரும், லூயி பாஸ்டர், கணிதமேதை இராமானுஜம் போன்ற பெரியோர்களின் வாழ்க்கை வரலாற்றை நீங்கள் படிக்க வேண்டும். அவர்கள் கல்லூரியில் கற்காவிட்டாலும், அஞ்சா நெஞ்சமும், உறுதியான உள்ளமும் உடையவர்களாக இருந்தார்கள், வாழ்க்கையில் முன்னேறினார்கள்.

நோபல் பரிசு பெற்ற நமது நாட்டு விஞ்ஞானியான சர்.சி.வி.இராமன், சென்னைப் பல்கலைக் கழகத் துணை வேந்தராகப்