பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு


ஜி.டி. நாயுடு கண்டுபிடிப்பில் இந்த வாக்குப் பதிவு இயந்திரத்தைக் கண்டுபிடிப்பதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பு, உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானிகளுள் ஒருவரான தாமஸ் ஆல்வாய் எடிசன், இந்த ஒட்டுப் பதிவு இயந்திரத்தைக் கண்டுபிடிக்க மிக முயற்சி செய்தார். ஏதோ சில சிக்கல்களால் அவர் அந்த முயற்சியை அன்று கைவிட்டு விட்டார்.

எடிசன் கைவிட்ட அந்த அரும் முயற்சியை, தமிழ்நாட்டுத் தொழிலியல் விஞ்ஞானியான ஜி.டி. நாயுடு அப்போதே கண்டு பிடித்தார் - வெற்றியும் பெற்றார்!

சாலைகளில் ஓடும் பேருந்துகளின் வேக அதிர்ச்சிகளைச் சோதித்துப் பார்க்கும் Vibrat Testing Maching என்ற ஒரு கருவியை ஜி.டி. நாயுடு கண்டுபிடித்தார்.

இந்த வேக அதிர்ச்சியைச் சோதிக்கும் கருவியைக் கண்டு பிடித்தவர். தனது பேருந்துகள் ஒடும் வேகம் என்ன? எவ்வளவு? என்பதை அறிவதற்காகவே முதன் முதலாக அதைப் பயன்படுத்திடத் தனது பேருந்துகளுக்குப் பொருத்தினார்.

பழங்களைச் சாறு பிழியும் கருவிகள் இப்போது பழக் கடை களில் இயங்குவதைப் பார்க்கின்றோம். சாத்துக்குடி ஜூஸ், ஆப்பிள். திராட்சை, அன்னாசி, சப்போட்டா, ஆரஞ்சு, காரட் போன்றவைகளை இயந்திரக் கருவிகளில் போட்டு சாறு பிழிந்து விற்கிறோம். பருகுகிறோம் அல்லவா? அந்தக் கருவிகளைக் கண்டு பிடித்தவர் நமது ஜி.டி. நாயுடுதான். இது எத்தனைப் பேருக்குத் தெரியும்?

இரும்புச் சட்டங்களில் உள்ள நுணுக்கமான வெடிப்புகளைக் கண்டுபிடிக்கும் Magro Plux Testing Unit என்ற கருவியை ஜி.டி. நாயுடு என்ற அறிவியல் மேதைதான் கண்டுபிடித்தார். யாருக்குத் தெரியும் இந்த விஞ்ஞான சாதனை? இருட்டடிப்பு செய்து விட்டன அப்போதைய மத்திய - மாநில அரசுகள்.

இன்றைக்கு எந்தக் கணக்கைப் போடுவதானாலும் சுலப மாகப் போடுவதற்குரிய Calculating Machine-னைப் பயன்படுத்தும் நிலை உள்ளது. ஒவ்வொரு மளிகைக் கடைக்காரனும் அதைப் பயன் படுத்திடும் வளர்ச்சியை அது பெற்றுள்ளது. அந்தக் கணக்கிடும்