பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

15


கருவியைக் கண்டுபிடித்தவர் யார் தெரியுமா? நமது தொழிலியல் விஞ்ஞானியான ஜி.டி. நாயுடு அவர்கள்தான்.

இவை மட்டுமா? தூரத்துப் பார்வைக்காகப் பயன்படுத்தும் தொலைப் பார்வை கண்ணாடியான Lence-யும்; குளிர்பதனக் கருவியான Refrigerator-யும்; ஒலிப்பதிவு செய்யும் இயந்திரமான Recording Machine-யும், வானொலி கடிகாரமான Radio Clock-கையும் காஃபி தரும் கலவை இயந்திரமான Coffee Supplier-ரையும், பேருந்து நிலையத்திற்குள் நுழையும் பேருந்துகளின் கால நேரத்தையும், அது போலவே நிலையத்தை விட்டுப் புறப்பட்டு வெளியே போகும் காலத்தையும், கணக்கிடும் கருவியையும், உணவு தானியங்களை மாவாக அரைக்கும் Griender கருவிகளையும், வானொலி Radio பெட்டிகளையும் கண்டுபிடித்தவர் நமது ஜி.டி. நாயுடுதான் என்றால், தமிழ் மக்கள் ஆச்சரியப்படுவார்கள்.

நகராட்சிகள், பேரூராட்சிகள், பெரும் நகரங்கள்தோறும் முக்கியமான இடங்களில் நான்கு முகக் கடிகாரங்களை - அதாவது Tower Clock-க்கையும், கார்களுக்கும், அதாவது உந்து வண்டி களுக்கும், பேருந்துகளுக்கும் தேவையான உதிரி உறுப்புகளைச் செய்து கொள்ளும் Foundry Castings கருவிகளையும், மின்சார மோட்டார் உற்பத்திகளையும் கண்டுபிடித்த விஞ்ஞானியாகவும் ஜி.டி.நாயுடு விளங்கினார்.

செப்புக் கம்பிகளைப் பல வகையான அளவில் தயார் செய்யும் ஆர்முச்சூர் வைண்டிங் என்ற டைனமோக்களுக்குத் தேவையான கம்பிச் சுருள்களைத் தயாரிக்கும் நிறுவனத்தையும் ஜி.டி. நாயுடு உருவாக்கினார்.

சத்து மாவு தயாரிக்கப்படும் Malt Products நிறுவனத்தை நாயுடு ஏற்படுத்தினார். காசுகளை ஒரு கருவியுள் போட்டால், அந்தக் கருவி தானாகவே பாடல்களை பாடும் Slot Singing Machine-யும் பொழுது போக்குக்காகக் கண்டுபிடித்தவர் திரு. நாயுடு.

மேற்கண்ட கண்டுபிடிப்புக் கருவிகளை எல்லாம் தொழில் நிறுவனத்தின் பயன்பாடுகளுக்காக உருவாக்கியவை போக, கல்வித் துறையில் தொழில் நுணுக்கப் பள்ளி, பொறியியல் கல்லூரி போன்ற பள்ளிகளையும், சித்த மருத்துவத் துறையில், பல மருந்துகளைப்