பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/183

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
17. தொழிலியல் விஞ்ஞானி -
ஜி.டி. நாயுடு மறைந்தார்!

தொழிலியல் துறையில் பற்பல அறிவியல் புதுமைகளை, விஞ்ஞானக் கருவிகளைக் கண்டுபிடித்து, அறிவியல் உலகுக்கு கொடையாகக் கொடுத்துப் புகழ் பெற்ற அறிவியல் வித்தகரான கோவை ஜி.டி. நாயுடு அவர்களை, உலக விஞ்ஞானிகள் எல்லாம் வியந்து பாராட்டிப் பெருமையோடு போற்றினார்கள். அவர்களுள் ஒருவர் நோபல் பரிசு பெற்ற அறிவியல் மேதை சர்.சி.வி. இராமன் ஆவார். அவர் என்ன பாராட்டுகிறாள் என்பதையும் கேட்போமே......!

சர்.சி.வி. இராமன்
பாராட்டுரைகள்!

தமிழ் நாட்டில் பிறந்த கோவை ஜி.டி. நாயுடு அவர்களின் பல்துறை அறிவை, உலகத்திலுள்ள அறிவியல் அறிஞர்கள் என்னிடமே பாராட்டியும், புகழ்ந்தும் கூறி இருக்கிறார்கள்.

விஞ்ஞானக் கண்டுபிடிப்புத் துறையில் குறிப்பிடத்தக்க மனிதரான திரு. ஜி.டி. நாயுடுவைப் பற்றியும் அவருடைய அருமையான பண்புகளைக் குறித்தும், அவரது அற்புதமான அறிவியல் கண்டுபிடிப்புக் கருவிகளைப் பாராட்டியும் எழுதும் திறமை எனது எழுதுகோலுக்கு இல்லை என்று நம்புகிறேன்.

போத்தனூர் நகரம் அருகே உள்ள நாயுடுவினுடைய விவசாயப் பண்ணையை நான் பார்த்தேன். அங்கே அவர் எண்ணற்ற அற்புதங்களைச் செய்திருப்பதையும் கண்டேன்.

ஜி.டி. நாயுடு சிறந்த ஒரு கல்விமான், பொறியியல் மேதை; தொழில் நுட்ப வல்லுநர்; அதே நேரத்தில் அவர் ஓர் அன்பான