பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

75


நுட்பங்களை உற்று நோக்கி வியந்தார். அது போலவே, சப்பான் நாட்டின் புயல் வேகத் தொழிலியல் வளர்ச்சிகளையும், அவை உலகச் சந்தைகளில் மக்கள் பாராட்டுதல்களைப் பெற்று விற்பனையாகிக் கொண்டிருக்கும் பொருளாதார முன்னேற்றங்களையும் புரிந்து, தனது மனத்தில் பதிய வைத்துக் கொண்டார் - திரு. நாயுடு அவர்கள்.

இரண்டாவது உலகச் சுற்றுப் பயணத்தின் அனுபவம், ஜி.டி. நாயுடு அவர்களுக்கு, முதல் உலகச் சுற்றுப் பயணத்தை விட அதிக அறிமுகமும், அனுபவமும் உருவாக்கிக் கொடுத்தது; புதிய மனிதராக அவர் தமிழ் நாடு வந்தார்.

இறுதியாக, இந்தியாவுக்குப் புறப்பட கப்பல் ஏறினார். அதே கப்பலில் இந்திய வைசியராயாக நியமிக்கப்பட்ட லார்டு லின்லித்கோ பிரபு தனது மனைவியுடன் இந்தியா வந்து கொண்டிருந்தார்.

‘லார்டு லின் லித்கோ’வுக்கு,
கப்பலில் விருந்து!

அந்தக் கப்பலில் உள்ள சில இந்தியர்களுடன், வைசியராய் லின்லித் கோ பிரபுவுக்கும் - அவரது மனைவியாருக்கும் கப்பலுக் குள்ளேயே வரவேற்பையும், விருந்து ஒன்றையும் திரு. நாயுடு வழங்கினார். கப்பலுக்குள்ளே நடந்த இந்த இந்திய வைசியராய் வரவேற்பையும் - விருந்தையும் நாயுடு அவர்கள் புகைப்படம் எடுத்தார். அனைவரும் இந்தியா வந்து சேர்ந்தார்கள்.