பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[5]

சீத்தலைச்சாத்தனர் இளங்கோ அடிகளாரின் தமையனை சேரன் செங்குட்டுவனிடத்தில் கட் புக்கொண்டிருந்தனர். அங்கட்புக் காரணமாகக் கண்ணகி என்பாளது கற்பின் மேம்பாட்டை அவனுக்கு எடுத்துக்கூறி, அவனேக்கொண்டு அவளுக்குக் கோயில் கட்டுவித்து, நித்திய பூசை கள் நியமமாக நடத்தி வைக்கச் செய்த சீலர் ஆவர். இவர் செங்குட்டுவனுக்குக் கண்ணகியின் வரலாற்றைக் கூறிய போது, அருகு இருந்து கேட்ட பின்னரே இளங்கோவடிகள் சிலப்பதி காரமாம் சீரிய நூலைச் செய்ய நேரிட்டது. ஆகவே, கற்புடைக் கடவுளாம் கண்ணகியின் கோயில் எடுப்புக்கும், நெஞ்சை அள்ளும் சிலப் பதிகாரமாம் காவியத்தை நாம் பெறுதற்கும் பெருங்காரணர் சீத்தலைச் சாத்தனர் என்பதை அறிந்து நாம் இன்புற வேண்டுபவராவோம்.

இவர் பெரும்புலவராய் இருந்தும் திருவள்ளு வர் எழுதிய திருக்குறளில் மிகுந்த ஈடுபாடு உடையவராய் இருந்தார் என்பதை முன்னர்க் கண்டோம். திருவள்ளுவரிடத்திலும், அவர் செய்த நூலிடத்திலும் இவர் கொண்டிருந்த மதிப்பு, இவர் எழுதியுள்ள நூலாகிய மணிமே கலையில் திருவள்ளுவரையும் திருக்குறளேயும் புகழ்ந்து பேசுவதிலிருந்து நன்கு உணரலாம். இவர் திருவள்ளுவரைப் பொய்யில் புலவன் ’ என்று கூறிப் போற்றுகிருர் , திருக்குறளைப் பொருள் உரை என்று புகழ்கிருர் : திருக்குறள் நூலிலிருந்து குறளே எடுத்து ஒர் எழுத்தும் ஒரு