பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[95 J

யவன் என்றும், யானைப்படையுடையவன், அத ைேடு யானே வன்மை பெற்றவன் என்ற பொரு, ளில் சிறுகண் யானைப் பெறலருங் தித்தன்' என் றும் புகழப்பட்டுள்ளான்.

தித்தன் வாழ்ந்த உறையூரின் சிறப்பைப் புலவர் பலர் பாடிப் புகழ்ந்துள்ளனர். மதுரை நக்கீ ரனர் "செல்லா நல்லிசை உறந்தை " என்கிருர். அதாவது, கெடாத நல்லபுகழையுடைய உறந்தை யாம். வெண்ணெல்வேலி உறந்தை' என்பர் பரணர்.

இந்த அளவிலும் உறந்தையைப் பரணரும், மீதுரை நக்கீரரும் புகழ்ந்து கின்ருர் அல்லர். மகளிர் மலர் பறிக்கும் அழகினே அவல் வகுத்த பசுங்குடையால் புதல்முல்லே பூப்பறிக்குந்து’ என்று பாடியுள்ளனர். இதன் பொருள் பள்ள மாகப் பனைமட்டையால் அமைத்த குடையில் புதரில் வளர்ந்த முல்லையைப் பறிப்பர் என்பது. இவ்வாறு வருணித்தவர் பரணர்.

மதுரை நக்கீரர் உறந்தையின் உழவர்களின் இயல்பை நன்கு இயம்பியுள்ளனர். அவர்கள் மருத நிலத்தை நன்கு உழுது அதன் பயனே நன்கு துணேயாய் இருந்து உழைக்கும் எருதுகள் வயிருர உண்டு உவக்க முல்லே நிலங்க்ளில் மேய விடுவர் என்றும், முயல் இறைச்சி, வாளே மீன், பழஞ்சோறு இவற்றைப் புசித்துப் பூரிப்பர் என் றும், மலர்சூடி மகிழ்வர் என்றும்,கள்&ளப்பருகிப் பரவசம் உறுவர் என்றும் பாடி மகிழ்கின்ருர்,