பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 97 )

பெருந்தோளன்னே என்னும் அடியால் தெரிய வருகிறது. இத்தொடரால், இவன் புற்கை உண் டும் வாடாத வனப்புடைய பெருந்தோளனய் இருந்தமை பெறப்படுகிறது. கடுகு செத்தாலும் காரம் போகுமா ? சோழ மரபினனை தித்தன் மகன் அல்லனே இவன் ?

சோழன் போரவைக் கோப்பெருநற்கிள்ளி யைச் சாத்தந்தையார் என்னும் ஆண்பாற்புல வரும் பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணே யாராம் பெண்பாற்புலவரும் பாடியுள்ளனர்.

சாத்தந்தையார் பாடல்களால் இவனது வீர மும், முக்காவல் நாட்டு ஆவூர் மல்லனே வென்ற தும் அறிய வருகின்றன. நக்கண்ணேயார் பாடல் களால் அவ்வம்மையார் இவனேக் காதலித்த குறிப்பும் காணப்படுகின்றது. சாத்தந்தையார் இவனைப் பாடிய பாடல்கள் மூன்று. நக்கண்ணே யார் பாடிய பாடல்களும் மூன்று. இந்த ஆறு பாடல்களும் புறநானூற்றில் இன்றும் பொலி கின்றன.

போரவைக் கோப்பெருநற்கிள்ளி சோழ மரபினன் என்பதை ஆர்கார்ச் செறியத் தொடுத்த கண்ணிக் கவிகை மன்னன்’ என்னும் சாத்தந்தையார் இவனைப் பற்றி அறிவிக்கும் அடியால் அறியலாம். அதாவது, நாரால் கட்டப் பட்ட ஆத்தி மாலேயினையும், பிறர்க்கு ஈயக் கவிந்த கையையும் உடைய வீரன் என்பது. ' நல்ல குடிப் பிறந்தார் நல்கூர்ந்தார் ஆலுைம்

தொ-7