பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லே என மாட்டார் இசைந்து,” என்பது கம் முன்னேரது நடை முறை வாக்கன்ருே ? ஆகவே, இவனதுகை, கொடுக்கக் கவிந்த கை ஆயிற்று.

5

போரவைக் கோப்பெருநற்கிள்ளி முக்காவல் நாட்டு ஆவூர் மல்லனெடு போர்தொடுக்க வேண் டிய வாய்ப்பு நேர்ந்தது. இவனே நாடிழந்தவன்: தந்தையாரின் சார்பு நீங்கினவன். இவனுடன் போர் புரிய வருபவன் சிறந்த வீரன். மல்லன் என்னும் பெயரே அவனது உடல் வன்மையின் யும், மற்போர் தொடுக்கும் திறனையும் வெளிப் படுத்தி நிற்கிறது. ஆகவே, பெருநற்கிள்ளி கலாட்படையுடனும் யானைப் படையுடனும் போர்க்குச் சென்றனன். இவனது படையின் ஒலி கடல் ஒலியினும் சிறந்ததாய் இருந்தது. யானையின் ஒசையோ, கார்கால இடி ஒசைபோல இருந்தது. r

ஈண்டு ஒர் ஆசங்கை எழலாம். அதாவது, நாடு இழந்து வறுமையால் வாடிய போரவைக் கோப் பெருகற்கிள்ளிக்குப் படை ஏது என்பதே அந்த ஐயம். இவன் தந்தையார் தம் மகன் போருக் குச் செல்வதை அறிந்து தம்படையினை அனுப்பி இருக்கவேண்டும். இன்றேல், ஏது படை? " தானடாவிட்டாலும் தன் தசை ஆடும், என்பது பழமொழி அன்ருே ?

விபீஷணன் தன் தமையனை இராவணனே வெறுத்தான் ; பழித்தான் : இந்த அளவிலும் நில்லாமல் தன் அண்ணனுக்கு நேர்ப் பகைவ