பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

הפח

னை இராமனிடமே சென்று சரண் புகுந்தான் : அந்த இராமனுல் இராவணன் இறக்கவும் வழி வகைகள் செய்தான். இராவணனும் இறந்தான். தன் அண்ணன் நல்லோன் அல்லன். இறந்ததே நல்லது என்று எண்ணி மகிழ்ந்தான் அல்லன் விபீடணன்; தன் தமையன் இறப்புக் குறித்து வாய்விட்டு அரற்றினன். அவ்வரற்றல் யாவர் உள்வத்தையும் உருக்க வல்லது.

“ உண்ணுதே உயிர்உண்ணு தொருநஞ்சு ; சனகிஎனும் பெருகஞ் சுன்னைக்

கண்ணுலே நோக்கவே போக்கியதே

உயிர் ! நீயும் களப்பட் டாயே!

எண்ணுதேன் எண்ணியசொல் இன்றினித்தான்

எண்ணுதியோ ? எண்ணில் ஆற்றல்

அண்ணுவோ! அண்ணுவோ! அசுரர்கள்தம்

பிரளயமே அமரர் கூற்றே!”

என்னும் இப்பாடலேப் படித்துப் பாருங்கள். உண்மை தெரியவரும்.

இதனே நோக்கும் போது, தன் உறவு பற்றி இரக்கமே தோன்றும் என்பது புலனுகிறது. ஆகவே, தித்தன் தன் மகன் பகை கொண்டு வெளியேறினாலும், இவன் மல்லனோடு போர் புரியத் தொடங்கிய போது தன் படையினே அனுப்பி இருப்பன் என்று யூகிக்க வேண்டி உளது. அப்படையின் வன்மையோ ஆர்ப்பெழு கடலினும் பெரிது : “ அவன் களிறே கார்ப் பெயல் உருமின் முழங்கல் ஆனவே" என்றனர் சாத்தந்தையார்.