பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[100 l.

போரவைக் கோப்பெருநற்கிள்ளி படைப் பலத்துடன் போர்க்குச் சென்ருனுயினும், தனக் குத்தானே உதவி என்பது போல, தானே தனித்துப் போர்செய்து வெற்றி காணக் கூடிய வன். இவன் கையகப்பட்டவர் எவராயினும் தப்புதல் அரிது. இவன் செய்யும்போர் விரைந்து செய்யும் போர். இது சாத்தந்தையார், 'தைத் தற்குச் செலுத்தும் ஊசியைவிட வேகமுடை யது" என்ற உவம்ை காட்டி உரைப்பதால் அறிய வருகிறது. இதனைப் புலவர் வாக்காகிய 'ஊசியின் விரைந்தன்று மாதோ ஊர் கொளவந்த பொருநைெடு ஆர்புனே தெரியல் நெடுந்தகை போரே. என்ற அடிகளால் அறிந்துகொள்ள லாம். ஈண்டு ஊர் கொள வந்த பொருநன் ஆவூர் மல்லய்ை இருக்க வேண்டும். ஆர் புனே தெரியல் நெடுந்தகை போரவைக்கோப்பெரு நற்கிள்ளி என்று கூற வேண்டுவதில்லை. இவன் குலமாலேயாம் ஆத்தியைப் புனைந்திருந்தமை யின், 'ஆர்புனே தெரியல் நெடுந்தகை எனப்பட்டான். ஆத்தி மாலே சோழர்க்கு உரியது என்பதை ஈண்டு நினைவு கொள்க.

இன்னோரன்ன குடிச்சிறப்பும் மறச்சிறப்பும் கொண்ட கோப்பெருநற்கிள்ளி முக்காவல் நாட்டு ஆவூர் மல்லனுடன் பொருது வென்ற சிறப்பைக் காண்போமாக.

மல்லன் ஆமூரினன் என்பதும் மிக்க வன்மை யுடையவன் என்பதும் அவனைப்பற்றிச் சாத்தங்