பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தையார் ஆமூர் ஆங்கண் மைந்துடை மல்லன் என்று சுட்டி இருப்பதால் அறியலாம். அவனது வலியை அடக்கினன் என்பதை 'மதவலிமருக' என்னும் தொடர் விளக்கிக்கொண்டிருக்கிறது. மல்லன் மற்போரில் சிறந்தவன். இக்குறிப்பு அவன் பெயரால் அறிய வருகிறது என்பதை முன்பே கண்டோம். ஆகவே, அவனுேடு வாட்போரோ, விற்போரே பெருநற்கிள்ளி தொடங்காமல், மற்போரே தொடங்கினன் : அவைேடு மற்போரிட்டு அவனேக் கீழே சாய்த் தான் , சாய்ந்த அவன்மீது ஒரு கால ஊன்றி ன்ை. அப்பொழுது, மல்லன் சோழனது பிடியி னின்று விலகப் பல முயற்சிகளேச் செய்தான். இத்தகைய அவனது செயலேத் தடுக்க மற் ருெரு காலால் அவனது முதுகையும் வளைத்துக் கொண்டான் கிள்ளி. இந்தக் காட்சியினைப் புலவர் சாத்தந்தையார், ஒரு கால் மார் பொதுங்கின்றே : ஒரு கால் தார்தாங்கிப் பின் ஒதுங்கின்றே” என்று பாடி அறிவித் துள்ளனர். இந்த அளவிலும் பெருநற்கிள்ளி

நின்ருன் இல்லே அவன் கால்களேயும். தலையையும் முரித்து வெற்றி கொண்டான். மல்லனது தலையைக் காலைப் பெருநற்கிள்ளி முரித்ததற்கு நல்ல உவமையினேப் புலவர் குறிப்பிட்டுள்ளார். அதுவே பசித்துப் பண முயலும் யானேபோல இருதலே ஒசிய' என்பது. அதாவது, பசிகொண்ட யானே மூங்கிலே முரிப் பதுபோலக் கரங்களும் தலையும் முரிய மோதி என்பதாம்.