பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[चच्चz...]

சாத்தந்தையார் பெருநற்கிள்ளியின் வீரத்தை நேரில் கண்டே இவ்வாறெல்லாம் பாடியிருக் கிருர் , தாம் கண்டதையே கூறியுள்ளார். இந்த வியப்பினைத் தம்மளவில் துய்க்கவிரும்ப வில்லை. இக்காட்சியினைப் புலவர் பெருநற் கிள்ளியின் தந்தையான தித்தனும்நேரில் தன் கண்களால் காணவேண்டும் என்று எண்ணு கின்ருர் - எண்ணரிய எண்ணத்தை வெளிப் படவும் தம் பாட்டிலும் இணேத்துவிட்டார். இதோ பாருங்கள்:

' கல்கினும் கல்கா ஞயினும் வெல்போர்ப் போரருங் தித்தன் காண்கதில் அம்ம.”

என்னும் அவரது உணர்ச்சி மிக்க அடிகளைப் பர்டிய புலவருக்கு ஒர் ஐயம் உள்ளத்தில் உண்டு. தித்தன் தன் மகனது போர் குறித்து வியப் பானே வியக்கமாட்டானே என்பதே ஐயம். காரணம், தந்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்ட பகைமை என்ருலும், தீத்தன் காணவேண்டும் என்பதே புலவரது உள்ளக் கிடக்கை.

போரவைக் கோப்பெருநற்கிள்ளியின் தோற் றப் பொலிவும் போர்த்திறனும், பெருங்கோழி நாய்கன் மகளார் நக்கண்ணேயார் என்னும் பெயரிய மாதராரைக் காதலிக்கவும் செய்து விட்டன. இவனது தோற்றப் பொலிவினையும், வீரச்சிறப்பையும், "அடிபுனைதொடுகழல் மை