பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[105 )

" என்னே : காவற்பெண்டு என்ற தலைப்பில், மற்ருென்று விரித்தல் என்ற வகையில், போரவைக் கோப்பெருநற்கிள்ளியின் சிறப்பே பேசப்பட்டதே! " என்று கருத வேண்டா. காவற்பெண்டின் சிறப்பினே முற்ற முடிய உணர வேண்டுமானல், கோப்பெருநற்கிள்ளியைப் பற். றித் தெரிந்தே ஆகவேண்டும். இவனது வெற் றிக்கும், வீரத்திற்கும், உடற் பொலிவிற்கும் இவ் வம்மையார் தாம் காரணர் எனில், அ.து உண் மையாகுமே அன்றி, வெறும்புகழ்ச்சி அன்று.

இவ்வம்மையார் வீரக்குடி மரபினர். அம்மர பினர் என்பதை இவரது பாட்டே அறிவித்துக் கொண்டிருக்கிறது. அப்பாட்டில் வீர உணர்ச்சி மிக்க உரைகளே பொருந்தியுள்ளன. இவரது பாட்டிற்குத் தினே வகுத்த புறநானுற்று உரையாசிரியர், ஏருண்முல்லே ' என்று குறிப் பிட்டுள்ளனர். ஏருண்முல்லேயாவது, எதிர் இல்லாதபடி ஆண்மைத் தன்மை மேன்மேல் ஏரு நின்ற குடி ஒழுக்கத்தினே உயர்த்திச் சொல்லு தல் என்பதாம். மறம் கனலும் ஏருண்குடி , என்பர் புறப்பொருள் வெண்பா என்னும் நூலின் ஆசிரியர். இத்தகைய வீரக் குடியில் தோன்றிய காவற்பெண்டு தாம் பாதுகாத்து வந்த கோப்பெருநற்கிள்ளிக்கு இளமை முதற் கொண்டே வீரத்தையும் ஊட்டி வளர்த்திருப்பர் அல்லரோ ? உடல் வளத்தையும் கவனித்து வளர்த்து வந்திருப்பர் அல்லரோ ? ஆகவே, இவ் வம்மையாரின் வளர்ப்பின் சிறப்பே கோப்பெரு