பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[ 106 |

நற்கிள்ளியின் வெற்றிச் சிறப்பிற்குக் காரணம் என்பதில் ஐயம் உண்டோ ? இல்லே.

பிள்ளைகளின் போக்கிற்குத் தாய்மார்களே காரணம் என்பது பண்டும் இன்றும் உணர்ந்து வரும் ஒர் உண்மையாகும். சிவாஜி மன்னர் பெருவீரராய் விளங்கியதற்குக் காரணம், அம் மன்னர் தம் குழந்தைப் பருவத்தில் வளர்க்கப் படும்போதே ராமாயண, பாரதக் கதைகளேக் கேட்டு வந்த பயனே ஆகும். அக்கதைகளில் இராமனது வீரம், அருச்சுனனது வெற்றிச் சிறப்பு ஆகியவைகளே சிவாஜி மன்னரைப் பெருவீரராகச் செய்தன. இன்று கூடச் சப் பான் நாட்டில் தம் பிள்ளைகளுக்கு வீரர்களுடைய வரலாறுகளேயே பெரிதும் தாய்மார் கூறித் தம் பிள்ளைகளே வீரர்களாகத் திகழச் செய்கின் றனர் என்பது வரலாற்று உண்மை. இந்நிலை யில் காவற்பெண்டிர் கோப்பெருநற்கிள்ளியை வளர்த்தமையால்தான் அவன் வீரய்ைத் திகழ்ந் தான்.

இனி இவ்வம்மையார் புலவர் என்பதனையும், வீரக்குடியினர் என்பதையும் அறிவோமாக. இவ்வம்மையார் பாடியதாக ஒரே பாடல் புற நானுாற்றில் காணப்படுகிறது. அப்பாடலின் பொருட்செறிவையும் இனிதின் நுகர்வோமாக.

இவ்வம்மையார் இல்லம் போந்த ஒருவனே

ஒருத்தியோ இவர்தம் இல்லின் துணேப்பிடித் துக்கொண்டு, “ அம்மையிர் ! உங்கள் மகன்