பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாண்டுளன் ? என்று வினவினர். அது போது இவ்வம்மையார் விடுத்த விடை ' என் மகன் எங்குளன் என்ரு வினவுகிருய்? அவன் எங் குளன் என யான் அறியேன். என்ருலும், அவன் இருக்கும் இடத்தை ஒருவாறு என்னுல் அறிவிக்க இயலும். அதாவது அவனேப் பெற்ற வயிறு இது. அவனேக் காண விழைந்தால் போர்க்களத்திற்குச் சென்ருல் காணலாம். அங்கு தான் அவன் தோன்றுவான், ' என்பதாம். இங்ஙனம் கூறும்போது, தன் மகனது வீரத்தை ஒர் உவமை கூறி அறிவித்ததை நாம் பாராட் டாமல் இருக்க இயலாது. அதாவது, தம் மகனைப் புலியாக உவமிக்கிருர் , தம் வயிற்றை அப்புலி கிடந்த மலேக்குகையாகக் கூறுகிரு.ர். இனி இவ்வம்மையார் பாடிய பாட்டைப் பாருங் கள். அப்பாட்டு,

" சிற்றில் கற்றுரண் பற்றி, நின்மகன்

யாண்டு ளான்?”என வினவுதிர்; என்மகன் யாண்டுளன் ஆயினும் அறியேன் ஒரும் ; புலிசேர்ந்து போகிய கல்அளை போல ஈன்ற வயிருே இதுவே ; தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே.”

என்பது.

இப்பாட்டை அறியும் போது இவ்வம்மை யார், திருமணம் முடித்து, இல்லறத்தை மேற் கொண்டு, பிள்ளேப்பேற்றையும் பெற்று வாழ்க் தவர் என்பது தெரிகிறது. இல்லை என்ருல், “என் மகன் யாண்டுளன் ஆயினும் அறியேன்'