பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[.7 )

படுகின்ற மூன்று ஊர்களேயும் ; மங்கல முரசு, வெற்றி முரசு, கொடை முரசு எனப்படுகின்ற மூன்று முரசுகளேயும் : இயல், இசை, நாடகம் எனப்படுகின்ற மூன்று தமிழ்களையும் ; விற் கொடி, புலிக்கொடி, மீனக்கொடி எனப்படுகின்ற மூன்று கொடிகளேயும் ; கனவட்டம், பாடலம், கோரம் எனப்படுகின்ற மூன்று குதிரைகளேயும் பெற்ற சேர சோழ பாண்டியர் எனப்படும் வேந்தர் மூவரும் அவர் அவர் தம் தம் முடியின் மேல் வைத்துக்கொண்ட மாலே திருக்குறள் அன்ருே?" என்பது.

சீத் தலைச் சாத்தனரின் அறிவு ஆற்றலேக் காண விழையும் நாம் இப்புலவர் தனி நூலாக மணிமேகலை என்னும் நூலைத்தவிர்த்துத் தனிப் பாடல்களாகப் பாடியுள்ளனவாகக் கிடைத் துள்ள பாடல்களே நற்றினே, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, திருவள்ளுவ மாலே என்னும் தொகை நூல்களில் பரக்கக் காண லாம். மணிமேகலை என்னும் நூலில் இவர் புத்தமதக் கருத்துக்களே ஆழ்ந்த அனுபவ. முறையில் கூறியிருப்பதலுைம், புத்தர் பெரு மானேப் போற்றும் முறைகளே அழகாகக் கூறி யிருப்பதலுைம், இப்புலவர் பெருமானுர், புத்த மதத்தினேச் சார்ந்தவராய் இருக்க வேண்டும் என்பது புலகிைறது. ஈண்டு நாம் இப்பெருங் தகையாரது புலமைப் பெருக்கை அறிந்து இன் புறுதற்கு இவர் பாடியுள்ள புறநானூற்றுப் பாடலேயே பற்றுக்கோடாகக் கொள்வோமாக.