பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[8]

இவரது ஏனேய பாடல்களின் இன்சுவையினை நுகர்தற்கு இவ்வேடு இடங்தாராது. பின்னர் நீங்களே அப்பாடல்களேப் படித்துப் பெரும் பயன் உறுவீர்களாக.

சாத்தனர் பாடினதாகப் புறநானூற்றில் காணப்படும் பாடல் ஒன்றே ஆகும். அப்பாடல் பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன் மாறன்மீது பாடப்பட்டது. இம்மன்னனுக்கு முன்னும் பின்னும் அமைந்த சொற்களாகிய பாண்டியன், மாறன் என்பன, இவன் மூவேந் தர் குடிகளுள் ஒன்ருண பாண்டியர் குடியினன் என்பதைப் புலப்படுத்துகின்றன. இவன் பர்ண் டியர்குலத்து மன்னர்களுள் நற்பெயர் எடுத்த கல்லரசன் போலும்! அதேைலதான் கன் மாறன் என்று போற்றப்பட்டுள்ளான். இவ்ன் வாழ்ந்த இடம் ஒரு பெரிய அரண்மனை. அது பல விதமான அழகிய சித்திரங்களைக் கொண் டிருந்தது. அத்தகைய சித்திர மாடத்தில் இவன் இருந்து வாழ்கையில் இவனது வாழ்நாள் உலந்த பின், மண்ணுலகு விடுத்து விண்ணுல கிற்கு விருந்தாகச் சென்றவன். இவ்வாறு இப் பாண்டிய மன்னன் தான் வாழ்ந்திருந்த மாளி கையாகிய சித்திர மாடத்தில் உயிர் விட்ட கார ணத்தால், பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ் சிய நன்மாறன் என்று கூறப்பட்டனன். இவ் வாறு மன்னர்கள் எவ்வெவ்விடங்களில் இருந்து இற ந் தார்களோ, அவ்வவ்விடங்களையும் இணேத்து, இன்ன இடத்தில் இறந்த மன்னன்