பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[9 |

என்று குறிப்பிட்டு வந்த வழக்கம் தமிழகத்துத் தொன்று தொட்ட வழக்கமாகும். இதனைப் பண்டைக்கால மன்னர்கட்கு அமைந்திருந்த பெயர்களேக் கொண்டும் நன்கு உணரலாம். எடுத்துக்காட்டாகக் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி, சேரமான் சிங்கல்பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழியாதன், சோழன் இல வந்திகைப் பள்ளித்துஞ்சிய நலங்கிள்ளி சேட் சென்னி, சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ் சிய நன்மாறன், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி என்னும் மன்னர்களின் பெயர்களை நன்கு குறிப்பிட்டுக் காட்டலாம். எனவே, சீத்தலேச் சாத்தனரால் பாடப்பட்ட பாண்டியன் சித்திரமாடத்தில் பூதவுடல் நீத்துப் புகழ் உடல் பெற்றவன் என்பதையும் நாம் நினைவு கூர்வோமாக.

அம்மன்னனைப் பற்றி இப்புலவர் பாடியுள்ள புறநானூற்றுப் பாடல், நீண்ட பாடலும் அன்று: குறுகிய பாடலே ஆகும், அக்குறுகிய பாடலில் அம்மன்னனது வீரம், கொடை முதலியவற். றைச் சுருங்கச்சொல்லி விளங்கவைத்த பெருமை சீத்தலைச் சாத்தனரையே சாரும். சுருங்கச் சொல்லி விளங்க வைக்காதவர் அன்ருே ஒன் றைப் பாரித்துக் கூறுவர் ? இவ்வாறு பாரித்துக் கூறுபவரை அன்ருே வள்ளுவர் இழித்துக் கூறு