பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 10]

கிருர் ? அவர்களே எத்துனே அழகாகப் பழித் துக் கூறுகின்ருர் பாருங்கள் ! அதுவே,

பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற சிலசொல்லல் தேற்ரு தவர்.”

என்பது. இப்பாடலால் சுருங்கச் சொல்லி விளங்க வைக்காதவரைப் பற்றி வள்ளுவர் கொண்ட கருத்து விளங்குகிறதன்ருே ?

பாண்டியன் சித்திர மாடத்துத் துஞ்சிய கன் மாறன் நல்ல கம்பீரமான தோற்றமுடையவ ய்ை இருந்திருக்க வேண்டும். அவன் தோற்றப் பொலிவை நம் கண்முன் கொணர்ந்து காட்ட, அவனைப் பற்றிக் கூறும்போது சீத்தலைச் சாத் தனர், மாலே தாழ்ந்த அழகு மிக்க மார்பையும் முழந்தாளிலேதோய்ந்த பெரிய கையையுமுடைய அழகு மாட்சிமைப்பட்ட பாண்டியன்’ என்பதை,

ஆரம் தாழ்ந்த அணிக்ளர் மார்பின் தாள்தோய் தடக்கைத் தகைமாண் வழுதி '

என்று கூறிச்சிறப்பித்தார். இத்தகைய தோற் றப் பொலிவுடைய மன்னன் வீரம் உடையவனுப் விளங்கி இருந்திருப்பான் என்று விதந்து கூற வேண்டாவன் ருே? உண்மையில் வீரம்செறிந்த விடலையாகவே இருந்தனன் அப்பாண்டியன்.

அவன் பகைவர்கட்கு ஞாயிறுபோன்று வெப் பம் தருபவனாய் இருந்தான், என்று தண்டமிழ்ச் சாத்தனர் சிறிதும் தயங்காது கூறும் கூற்றே