பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. உறையூர் மருத்துவன் தாமோதரனுர்

சோழர்குல அரசர்களுக்குத் தலே நகரங்களாய் அமைந்திருந்த பேரூர்களுள் உறையூர் என்பதும் ஒன்று. உறையூர் கடைச் சங்க காலத்தில் சிறப்பு மிகுதியும் பெற்ற சீரூர் ஆகும்; புலவர் பலராலும் புகழப்படும் ஊரும் ஆகும். அது 'ஊர் எனப் படுவது உறையூர்,” என்று கூறப்படும் பெருமை மிக்கது. அதுவே தேவாரத்தில் மூக்கீச்சரம் என்று கூறப்பட்டுள்ளது. அவ்வூர்ச்சேவல் ஒன்று யானையோடு போர் செய்து அதனை வென்ற காரணம் பற்றி அவ்வுறையூர் கோழி என்ற பெயரையும் பெற்றுள்ளது. உறையூரை உறக்தை என்றும் கூறுவர். அப்பதியின் சிவா லயத்தில் வில்வமரம் தல விருட்சமாய் இருத்த லின், அதனே வில்வாரணியம் என்றும் கூறுதல் உண்டு. அத்தலத்தைச் சேர சோழ பாண்டிய ராகிய மூவேந்தரும் சேர்ந்து வழிபட்டுள்ளனர். அவ்வுறையூர் திருச்சிராப்பள்ளிக் கோட்டைப் புகைவண்டி கிலேயத்திற்கு மேற்கே ஒன்றேகால் கல் தூரத்தில் உள்ளது. 'அறம் துஞ்சும் உறந்தை-அதாவது, நீதி தங்கும் உறையூர்என்று காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ண ர்ை கூறிய கருத்தும் அவ்வூருக்குப் பெருமை தருவதாகும்.