பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 14 J

அந்த ஊரில் வாழ்ந்தவரே தாமோதரனுர் என் னும் புலவர். தாமோதரன் என்பது திருமாலுக் குரிய பெயர்களுள் ஒன்று. இப்பெயரை இப் புலவர் பெற்றுத் திகழ்ந்ததனால் இவர் திருமால் சமயத்தைச் சார்ந்தவராய் இருக்க வேண்டும் என்பதை யூகித்து உணரலாம். இவர் பெயர் மருத்துவன் தாமோதரனுர் என்று அடைமொழி யுடன் கூறப்பட்டிருத்தலின், இவர் மருத்துவ நூலில் வல்லவராய், நோய் நாடி, நோய் முதல் நாடி, அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்ப மருந்து கொடுத்துப் பிணியினைப் போக்கி வந்த மருத்துவத் தொழிலினராய் இருந்தவர் என்பது உணரப்படுகிறது. அதாவது, இவர் வைத்தியம் செய்யும் தொழிலினர் என்பதாம்.

உறையூர் மருத்துவன் தாமோதரர்ை, தாம் மேற்கொண்ட தொழிலுக்கு ஏற்பத் தாம் பாடி யுள்ள பாடல்களுள் ஒன்றில் அத்தொழிலில் தமக்கு இருந்த அறிவின் முதிர்ச்சியினை வெளிப் படுத்தியுள்ளார். அப்பாடல், திருவள்ளுவர் நூலாகிய திருக்குறளேயும், அந்நூலைச் செய்த ஆசிரியர் திருவள்ளுவரையும் புகழ்ந்து பாடப் பட்ட பாடல்கள் அடங்கிய திருவள்ளுவ மாலை. என்னும் நூலில் உள்ளது.

அப்பாடலில் தலே நோய் நீங்கக் கூறப்பட்ட மருத்துவமுறையும், மற்றும் ஒரு வரலாற்றுக் குறிப்பும் காணப்படுகின்றன. சாத்தனர் என் பவர் ஒரு பெரும்புலவர். இவரே மணிமேகலை.