பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[18]

வழக்கமன்று ; ஆனால், பிறைச் சந்திரனத் தொழுது வந்த வழக்கம் அன்றும் இன்றும் அமைந்த வழக்கமாகும். ' பிறை தொழுகென் றல் என்ற துறை அகப்பொருள் நூல்களில் காணப்படுகிறது. அமாவாசைக்குப் பிறகு இரண்டாம் நாள் ஆகாயத்தில் பிறையைக் காண்கின்றனர். இவற்ருல் அன்றும் இன்றும் பிறை தொழுதனர், தொழுகின்றனர் என எடுத் துக் காட்டலாம். இம்மரபையும் இப்புலவர் டிறக்க வேண்டியவராய் இருந்தார். இதற்குக் காரணம், வளவனது குடையின்மீது இருந்த புற்றே ஆகும். இப்புலவர் பெருமகனர் அச் சோழனைப் புகழ்ந்த பாடலில் நல்ல உவமையை அமைத்துப் பாடியுள்ளார். அவ்வுவமை படிக்கச் சுவை தருவதாகும். அதாவது, விண்ணில் திருவாதிரை என்னும் நட்சத்திரம் விளங்குவது, கடலில் செல்லும் பரதவர் கட்டுமரங்களில் இருந்த விளக்கு ஒளி விடுவது போன்றது என் பது. சிறு நட்சத்திரத்தின் மின் ஒளிக்குச் சிறு விளக்கு எத்துணேப் பொருத்தமாய் இருக்கிறது பாருங்கள்!

முந்நீர் காப்பண் திமில்சுடர் போலச் செம்மீன் இமைக்கும் மாக விசும்பு

என்னும் அடிகளே மேலே காட்டிய உவமை அமைந்த அடிகளாகும். ' கடலின் நடுவே மீன் பிடிக்கச் செலுத்தப்படும் கட்டு மரங்களி லிருந்து ஒளி விடும் விளக்குப்போலத் திருவா