பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[20]

எளியன் ஆவன். அவர்களே அவனே அணுகுதற் குரியவர்கள். உம்மைப்போன்ற பகை மன்னர் அணுகுதற்கு உரியர் அல்லர். அவன் எளியன் அல்லன், என்று கூறி எச்சரிக்கை செய்கின் றனர். இதனால், பிட்டங்கொற்றனது கொடைக் குணமும் வீர மேம்பாடும் வெளிப்படுகின்றன அல்லவா ? இவ்விரண்டும் அவன்பால் குடி கொண்டிருந்தன என்பதைப் புலவர் எத்துணேச் சமத்காரமாகக் கூறியுள்ளார் கவனித்தீர்களா ? இப்பிட்டங்கொற்றனது வன்மைக்குக் கொல்லன் தன் உலேக்களத்தில் வைத்துள்ள இரும்பால் ஆகிய உலேக்கல்லே உவமை கூறியுள்ளார். அவ் வுலேக் கல்லின்மீதுதான் காய்ச்சப்பட்ட இரும் புப் பொருள்கள் வைத்து அடிக்கப்படும். இவ் வாறு இங்கு இவர் பிட்டங்கொற்றனேப் பற்றிக் கூறிய கருத்துக்கள் யாவும் இவர் பாடியுள்ள பாடல்களில் காணக்கிடக்கின்றன.

உறையூர் மருத்துவன் தாமோதரனர் பாடி யுள்ள புறநானூற்றில் காணப்படும் மூன்ரும் பாட்டு யார்மீது பாடப்பட்டது என்பது அறி தற்கு இல்லே. ஆனால், அப்பாடலும் ஒருவன்மீது பாடப்பட்டது என்பது அப்பாடலில் உள்ள 'செருவெங்குரிசில் " என்னும் தொடரால் புலகிைறது.

அக்குரிசில் சிறந்த வீரன் ஆவான். அவன்

போரில் புறமுதுகு காட்டாது போர் செய்து, தன் சென்னியில் வடு உடையவனாய் இருந்தான்