பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. கணியன் பூங்குன்றனுர்

கணியன் பூங்குன்றனர் என்பார் புலவர். இப் புலவர் எழுத்துப் புலமையே அன்றிச் சோதி டங்கறும் சோதிடப் புலமையும் ஒருங்கே பெற் றவர் என்பதை இவரது பெயராகிய பூங்குன் றஞர் என்பதற்கு முன்னர் அமைந்த கணியன் என்னும் சொல் காட்டிக்கொண்டிருக்கிறது. கணியன் ஆவான் சோதிடம் உரைப்பவன். இச் சொல் இப்பொருளேத்தந்து கிற்பதைப் புறப் பொருள் வெண்பா மாலே என்னும் நூலிற் &sróöðT60s, 10.

இவ்வாறு சோதிடம் கூறுவோன் சிறந்த அறிஞன் என்பதையும், அப்புறப்பொருள் வெண்பா மாலே என்னும் நூலால் அறிந்து

கொள்ளலாம். ' துணிபு உணரும் தொல் கேள்விக் கணியன் என்பதும் ஈண்டு அறிதற்குரியது.

இத்தகைய சோதிடர்க்குரிய சிறப்பு இயல்பு கள் இப்புலவர் பெற்றிருந்த காரணத்தால், இப் புலவர் கணியன் பூங்குன்றனர் என்று சிறப்பிக் கப்பட்டனர். இவருக்கு இயற்பெயராய் உள்ள பூங்குன்றனர் என்பது இவருக்கு இடத்தால் வந்த பெயராகும். பூங்குன்றம் என்பது ஒரு நாட்டின் தலைநகர். "பூங்குன்ற நாட, என்று