பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[23]

காலடி நானூற்றில் வரும் தொடரால் இந்தக் கருத்தை உறுதிப்படுத்தலாம். அத்தகைய நாட் டின் பெயரைத் தம் பெயராக இப்புலவர் கொண் டுள்ளார். நாட்டின் பெயரை மக்கள் கொண்டு வாழ்கின்ருர்கள். என்பதற்குச் சான்ருக அண்ணு மலே, வேதாசலம், சேஷகிரி, திருவேங்கடம் என்னும் பெயர்களே மக்கள் இக்காலத்தில் சூட்டித் திகழ்வதைக் காணலாம்.

இவ்வாறு தொழிலாலும் இடத்தாலும் பேர் பெற்ற இப்பெரியார், சிறந்த புலவர். இதனே இவர் பாடிய பாடல்களாகப் புறநானூற்றிலும் நற்றிணையிலும் காணப்படுவனவற்றினின்றும் நாம் அறிய வேண்டுபவர்களாய் உள்ளோம். இவர் இரண்டே பாடல்களேப் பாடியுள்ளார். ஒன்று, புறநானூற்றுப் பாடல் , மற்ருென்று, நற்றிணேப்பாடல். நற்றிணேப் பாட்டைப்பற்றி நாம் நம் நாட்டத்தைச் செலுத்தாமல் போயினும், புறநானூற்றுப் பாடலில் நம் நாட்டத்தைச் செலுத்துவோமாக.

கணியன் பூங்குன்றனரது புறகானூற்றுப் பாடல் சிந்தைக்கும் செவிக்கும் இன்பம் தருவ தாகும் : படிக்கப் படிக்கப் பரமானந்தம் பயக்க வல்லதாகும் ; பரந்த மனப்பான்மையினைப் பாலிப்பதும் ஆகும். தமிழ் மக்களின் பண் பாட்டை அறிதற்கு இப்பாடல் பெரிதும் துணை செய்ய வல்லதாகும். இப்பாடல் முழுமையினே யும் எடுத்துப் பலர் பேசாமல் போயினும்,