பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதில் உள்ள ஓர் அடியினே எடுத்துக் காட்டாத சொற்பொழிவாளர்கள் இல்லே என்றுகூடக் கூறிவிடலாம். அச்சொற்பொழிவாளர் இப்புற நானுாற்றுப் பாடலேப் படித்தும் இருக்கமாட்டார். ஆல்ை, பலரும் சொல்வதைக் கேட்டுக்கேட்டுத் தாமும் அவ்வடியினத் தம் சொற்பொழிவின் போது இடையே கூறிவிடுவார். அவ்வடி எது தெரியுமோ ? அதுதான், யாதும் ஊரே : யாவரும் கேளிர்.” என்பது. ஏன் ? இவ்வடி உங்களுக்கும் தெரிந்ததுதானே ? இனி அப் பாட்டின் முழுப்பொருளேயும் காண முனேந்து நிற்போமாக.

கணியன் பூங்குன்றனர் நமக்கு நன்மை வரு வதற்கும், தீமை வருவதற்கும் நாமே காரணர் அன்றிப் பிறர் ஆகார்,' என்று கூறும் கருத்து மிக மிகச் சீரிய கருத்தாகும். இதனை இவர், 'தீதும் கன்றும் பிறர்தர வாரா,” என்றன்ருே கூறுகிருர்? இந்த உண்மையினே நன்கு உண ராத காரணத்தால், ந்ாம் துன்பம் துய்க்கும் போது, இத்துன்பம் இன்னவனல் வந்தது என்று அன்ருே எண்ணி ஏக்கம் எய்துகிருேம்? ஆல்ை, துன்பம் வந்ததற்கு ஆதிகாரணம் உண்மை உணரப்படுமானல், ஏக்கத்திற்கு இடம் இல்லா மல் போகும். நாம் சாவதன்பொருட்டுத் தளர்தல் கூடாது, என்ற உபதேசமும் இவரது பாடலில் காணப்படுவதாகும். 'சாதல் என்பது உலக இயற்கை. அது திடுமெனப் புதிதாக வந்தது என்று கருதவேண்டா. அது தொன்று