பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொட்ட உலக இயற்கையில் ஒன்று, என்ப தைச் 'சாதலும் புதுவது அன்று,” என்று கூறும் கருத்துப் போற்றுதற்குரிய கருத்தாகும்.

இப்புலவர் பெருமான் நல்வாழ்வு உற்ற போது அதன் பொருட்டுப் பெருமகிழ்வு கொண் டனர் என்றேனும், அன்றி வாழ்க்கையில் வெறுப்பு வங்துற்ற போது அதன்பொருட்டுத் துன்புற்றிருந்தனர் என்றேனும் நாம் நினைத் தற்கில்லே. இவர் இன்பதுன்பங்களே ஒரே வித மாகவே கருதி வாழ்ந்தவர் என்பது நன்கு தெரி கிறது. இதல்ை இவரது மனப்பான்மையினே நன்கு உணரலாம். இவரது இம்மனப்பான்மை

யைத் தான் இவரது பாடலில்,

' சாதலும் புதுவது அன்றே வாழ்தல்

இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே."

என்று இயம்பிச் சென்றனர். இவ்வரிய உப தேசமொழிகளே இவர் கூறியிருத்தல், தம் மனப்பண்பை மட்டும் எடுத்துக் காட்டுதற்கு அன்றி இப்பண்பில் ஏனய உலக மக்களும், வாழ்தல் வேண்டும் என்பதற்கே என்பதை நாம் உணர்ந்து இவரது அடி ஒற்றி நடக்கவேண்டும்.

வாழ்க்கை அதன் வினேப்படி நடக்கும் என்ப தும், இவரது ஆழ்ந்த அனுபவக் கருத்தாகும். அதாவது, ஊழின் வன்மைக்கேற்ப வாழ்வு அமையும், என்பதே இவர் கூற வந்த கருத்து. இவர் ஒர் உதாரணம் காட்டி விளக்கியிருப்பதி