பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[26]

லிருந்து இந்த உண்மையினை உணர்ந்து கொள்ளலாம். இவர் கூறும் உவமையாவது, " ஆற்றின் நீர் செல்லும் வழியே தெப்பம் செல் வதுபோல, உயிர் வாழ்க்கையும் ஊழின் போக் கில் நடக்கும், என்பதாம். எவ்வளவு பொருத்த மான உவமை பார்த்தீர்களா! இவ்வுவமை யுடன் கூடிய அரிய அடிகளே நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாவா ? அவ்வடிகளே,

"கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று

கீர்வழிப் படுஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படுஉம்." - என்பன இதன் பொருள், கல்லே அலேத்து ஒலித்துக்கொண்டு வரும் வளப்பம் மிக்க பெரிய யாற்றின் நீர் செல்லும் வழியே போகும் தெப்பம் போல. அரிய உயிரும் விதி வழியே நடக்கும்,' என்பதாம். -

இவ்வளவு அரிய பெரிய கருத்துக்களைத் தாமே அறிந்து கூறிய போதிலும், இவை அனைத்தும் தாம் கண்டறிந்து உரைத்த கருத் தர்க அறிவிக்க எண்ணுமல், தம் பணிவு தோன்ற இவை அனைத்தையும், "நன்மையின் கூறுபாட்டை அறிந்தோர் கூறியுள்ள நூலால் அறிந்தோம்,' என்று கூறியிருப்பது இவரது அடக்க முறையினை அறிதற்குத் துணை செய்ய வல்லதாகும். இவர் நூலொடு கூடிய மதி மிக்க விராய், உலக இயல்பைகன்கு உணர்ந்தவராய், சீரிய மனப்பண்பு வாய்க்கப் பெற்றவராய்த்