பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[27 J தம் உள்ளத்தில் கள்ளம் கபடு அற்றவராய் இருந்தமையினால், தம் உள்ளக் கருத்தை ஒளி யாது உரைக்கும் முறையில் தம் பாடலின் ஈற்றில்,

' பெரியோரை வியத்தலும் இலமே ;

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.”

என்று கூறி முடித்துள்ளார்.

இக்கணியன் பூங்குன்றனர் மனப்பண்பை காமும் வாய்க்கப் பெறுதல் வேண்டும். அவ் வாறு வாழ்தற்கான முறையில் நம் வாழ்வைப் பண்படுத்தி வாழ வேண்டும். அப்போதுதான் நாமும், பெரியோரை வியவோம்; சிறியோரை இகழோம்,' என்று பெருமதிப்புடன் பேசிக் கொள்ளும் நிலையினைப் பெறுவோம், அவ்வாறு அன்றி, இவ்வடியினை மனனம் செய்துகொண்டு, ஒப்பிப்பது போன்று உரைப்பதில் பயன் இல்லை. இந்தப் பண்புகள் இருந்தால்தான் நாமும், "யாதும் ஊரே யாவரும் கேளிர், என்னும் இவ்வடியினைக் கூறுதற்கு உரியவர் ஆவோம். இப்புலவர் பெருமானரின் அறிவுக்கூறும் அனு பவ வாழ்வும் நமக்கும் அமைய நாம் பாடு படுவோமாக.