பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. மதுரைத் தமிழக் கூத்தனுர்

மதுரைத் தமிழக் கூத்தனர் என்பவர் தாம் மேற்கொண்ட தொழில் காரணமாக இப்பெயர் பெற்றவர். இவர் மேற்கொண்ட தொழில், கூத் தினே நடத்தித் தாமே நடித்து வந்த தொழிலாய் இருக்கவேண்டும். இக்காரணம் பற்றி இவர் தமிழக் கூத்தனர் என்று கூறப்பட்டிருக்கிருர். 'ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணுய் இரு, என்னும் பழமொழி இன்றும் நிலைத்துப் பலராலும் கூறப்பட்டு வருதலின், ஆரியக்கூத்து என்பது ஒரு தனிச் சிறப்புடைய கூத்து என்பதை நாம் அறிந்துகொள்ளலாம் அன்ருே? அவ்வாறு ஆரியர்களால் நடிக்கப்பட்ட கூத்து ஆரியக்கூத்து என்று வழங்கப்பட்டது போல, தமிழர்கள் கடித்து வந்த கூத்துத் தமிழக்கூத்து ஆகும். தமிழர் தம் மொழியினைப் பகுத்துக் கொண்ட முறையாகிய இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என்ற மூன்றில் நாடகத் தமிழினையும் ஒன்ருகப் பகுத்துக் கூறிக்கொண் டதிலிருந்து தமிழர் நடிப்புத் திறனிலும் நனிமிகச் சிறந்தவர் என்பது தெள்ளத்தெளிய உணரும் உண்மையாகும். தமிழினேச் 'சங்கத் தமிழ் மூன்றும் தா" என்று குறிப்பிட்டுள்ள கூற். நினையும் காண்க.

தமிழ் மக்கள் தாங்கள் நடத்திய கூத்தினைச் சில சட்ட திட்டங்களுக்குட்பட்டு நடத்தியிருக்க