பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[29]

மாட்டார்கள் என்று கருத இயலாது. அவர்கள் கடத்தும் கூத்துக்கள் இந்திந்த முறைப்படி இருத்தல் வேண்டும் என்பதற்காக இலக்கண நூல்களையும் யாத்து அமைத்திருந்தார்கள். இக்கூத்தின் இலக்கணங்களே அகத்திய முனிவர் யாத்த அகத்தியம் என்னும் நூலிற் காண லாம். இவ்வகத்தியம், இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழ்க்கும் இலக்கணம் வகுத்த நூல் என்பர். மேலும், கூத்த நூல் என்ற பெயரு டைய தனி நூலும் நம் தமிழகத்தில் இருந்திருக் கிறது. இப்பகுப்பில் சயந்தம், செயிற்றியனர் எழுதிய செயிற்றியம், நூல் என்னும் பெயருடைய நாடக நூல், ஆதி வாயிலார் என்பவர் எழுதிய பரத சேபைதீயம், பரதம், மதிவாணர் என்னும் பாண்டியர் ஒருவரால் செய்யப்பட்ட மதிவாண ஞர் நாடக்த் தமிழ் நூல், முறுவல் என்னும் நூல் களும் அடங்கும். இவ்வாறு இலக்கிய இலக்க ணங்களோடு தமிழக்கூத்து அமைந்திருக்கு மால்ை, தமிழர் நாடகம் நடத்துதலில் ஈடும் எடுப்பும் அற்று விளங்கினர் என்பதில் எள்ள ளவும் ஐயம் இல்லே அல்லவா ? இந்தத் தொழி லினேச் சிறப்பாக இங்குக் கூறப்பட்ட புலவர் மேற்கொண்டு இருந்தமையில்ை இவர் தமிழக் கூத்தனர் என்றே வழங்கப்பட்டனர்.

இப்புலவர் வாழ்ந்த இடம் மதுரையாகும். அவ்வூர்ப் பெயரையும் இணைத்து இவர் மதுரைத் தமிழக் கூத்தனர் என்று வழங்கப் பட்டனர்.