பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[301

மதுரையின் மாண்பைத் தமிழ் நூல்கள் பல. வற்றுள்ளும் பரக்கக் காணலாம். மதுரை மிகு பழமை வாய்ந்த ஊர். இவ்வூர் பாண்டி நாட்டுத் தலைநகர். இத்தலை நகரின் பழமையை மாணிக்க. வாசகர் புலப்படுத்தும்போது, “ பாண்டி நாடே பழம்பதி யாகவும் என்றே பாடிச் சிறப்பித் துள்ளார். மதுரையம்பதியின் மாண்பை இன் னது என்று எடுத்துக் காட்டும் பாடல்களாகத் தனித்த முறையில் பரிபாடல் என்னும் நூலில் சில பாடல்கள் காணப்படுகின்றன. இப்பாடற். கருத் துக்களேமட்டும் உணர்ந்தாலே மதுரையின் மாண்பை உணர்ந்தவர் ஆவோம். மதுரையம். பதியையும் உலகம் முழுமையையும் புலவர்கள் துங்கள் அறிவாகிய தராசினல் நிறுத்துக் காணும். இாது நிறையில் உலகம் குறைந்தும், மதுரை ஏற்றம் மிக்கும் காணப்படும் என்ற பொருளில்,

'உலகம் ஒருங்றையாத் தாஞேர் கிறையாப்

புலவர் புலக்கோலால் தூக்க-உலகனைத்தும்

தான்வாட வாடாத தன்மைத்தே தென்னவன்

நான்மாடக் கூடல் ககர். ’

என்று பாடப்பட்ட பாடலால் மதுரையின் சிறப் பைக் காணலாம். இம்மதுரையம்பதி தமிழ் நாட்டகம் எல்லாம் நின்று நிலவும் புகழ் உடை யது என்றும், திருமகள் தன் நெற்றியில் தீட்டும் திலகம் போன்றது என்றும், மற்றும் பலவாருக வும் சிறப்பிக்கப்பட்டுள்ளது. இம்மதுரையிலும் இன்தச் சார்ந்த திருப்பரங்குன்றத்திலும் வாழ் வாரே நல்வாழ்வு பெற்றவர். தேவர் உலகில்