பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[31 )

வாழ யாரும் அங்குச்செல்ல விரும்பார் என்றும், இம்மதுரையில் வாழும் மக்கள் கொடையாளி களைக் கொண்டாடியும், இரவலர் வருகையினை இன்முகத்துடன் எதிர் நோக்கியும் நிற்பார்கள் என்றும் நம் முன்னேர் கருதியிருக்கின்றனர். இங்ங்னம் கருதிய கருத்தினே,

"ஈவாரைக் கொண்டாடி ஏற்பாரைப் பார்த்துவக்கும்

சேய்மாடக் கூடலும் செவ்வேள் பரங்குன்றும் வாழ்வாரே வாழ்வார் எனப்படுவார் : மற்றையார் போவார்.ஆர் புத்தேள் உலகு ?”

என்று பாடியும் அமைத்துள்ளார். சேப்மாடக் கூடல் என்னும் தொடர் மதுரையின் வான் அளா விய மாடமாளிகையின் சிறப்பையும் அறிவித் திருப்பதையும் உற்றுநோக்குக, இன்ைேரன்ன சீரும் சிறப்பும், பேரும் புகழும் உடைய மதுரை யில் தமிழக் கூத்தனர் வாழ்ந்தார் என்ருல், இவர் சீரியரே ஆவார். இப்புலவர் புத்திரப் பேற்றைப் புரையறப் பெற்றவர். இவர்க்குப் புத்திரசிகா மணிகளாய் விளங்கியவர்கள் கடுவன் மள்ளனர், நாகன் தேவளுர் என்பவர்கள். மதுரைத் தமி ழக் கூத்தனர் புலவர் என்பது இவர் பாடியுள் ளனவாக அகநானூற்றிலும் புறநானூற்றிலும் உள்ள பாடல்களால் நன்கு உணரலாம். புற நானூற்றில் ஒரு பாடலும், அகநானூற்றில் மூன்று பாடல்களும் இவர் பெயரால் காணப்படு கின்றன. இங்கு காம் புறநானூற்றுப் பாடலில் இவர் கூறியுள்ள கருத்தில் நம் கருத்தைச் செலுத்துவோமாக: