பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[32]

இப்புலவர் பாடியுள்ள புறநானூற்றுப் பாடல் மூதின்முல்லை என்னும் துறையினைச் சார்ந்தது. மூதின்முல்லேயாவது, வீரமகனுக்கேயன்றி, அவ் வீரக் குடியில் பிறந்த மகளிர்க்கும் வீரச்சினம் உண்டு என்பதை விதந்து கூறுதலாகும். இப் பாட்டில் சதிபதிகள் தம்மை நாடி வந்தவர்க்கு நிரம்பப் பொருள் உதவியும், உணவு உதவியும் வந்த கொடையாளர்கள் என்பது தெரிகிறது. ‘ காதல் மனையாளும் காதலனும் மாறின்றித் தீதில் ஒரு கருமம் செய்பவே, என்பதற்கு இங்குக் கூறப்பட்ட தலைவன் தலைவியர் ஒர் எடுத்துக்காட்டு என்றுகூடக் கூறலாம்.

இங்குக் கூறப்பட்ட வீரன் மனைவி பாணரை உண்பித்தாள் ; பரிசிலரை ஒம்பினுள் ; ஊண் கொடுத்து உபசரித்தாள் என்பதை அப்பாடல்,

  • மனையோள் பாணர் ஆர்த்தவும்

பரிசிலர் ஓம்பவும் கைதுாவாள் ”

என்று கூறுகிறது. இதன் பொருள், ' இல்லக் கிழத்தியாகிய வீரன் மனையாள் பாணரை வயிறு நிறைய உண்பிக்கவும், பரிசிலரைப் பாதுகாக்க வும் கையொழியாள், என்பதாம் ; அதாவது, கைக்குச் சிறிதும் ஒய்வு கொடாமல் இடையருது ஈந்து வந்தாள் என்பதாம். இவளேப் போலவே, வண்மை மிக்க வேலைத் தாங்கிய இவள் கணவனும் ஈந்து கை ஓய்ந்திலன் என்பதை,