பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{ (م 3 4

  • பரிசில் பரிசிலர்க்கு ஈய

உரவுவேல் காளையும் கைது வானே. "

என்னும் அடிகள் உணர்த்தி நிற்கின்றன. சிறு பிள்ளேகள் ஒய்ந்த நேரத்தில் வெளி இடங்களில் விளையாடிக்கொண்டும் ஆரவாரம் செய்துகொண் டும் இருப்பார்கள் என்பதைப் 'புன்தலைச் சிருஅர் மன்றத்து ஆர்ப்பு’ என்னும் அடி அறிவித்திருப்பதைப் படிக்கும் போது சிறு கிராமத்தின் இயற்கைக் காட்சி நம் கண்முன் தோன்றுகிறதல்லவா?

நம் புலவர் பெருமானுர் உவமை கூறுவதிலும் சிறந்த புலமை மிக்கவர் என்பதையும் நாம் அறிந்து இன்புற வேண்டும். புலவர் சிறு முயலே வருணிக்க விரும்புகிருர் , அம்முயலின் உடலில் அமைந்த மயிர்க்கு உவமை கூறக் கருதினர். அப்படிக் கருதிய இவர்க்கு கண்பு என்னும் ஒரு வகைக் கோரை நினே விற்கு வருகிறது. அதனேயே இவர் உவமையாக்கிப் பாடியுள்ளார். இவ்வாறு கண்பு என்னும் கோரையைப் போன்ற மயிரை யுடைய முயல் சிறு முயலாய் உடற்சிறுமைக்கு ஏற்பக் குறுகிய தாளேயுடையதாய் இருந்தது என்று கூறி, உடற்குறுகலும், தாட்குறுகலும் இருந்தாலும், நீண்ட செவியுடையதாய் இருந் ததை மறவாமல், 'நெடுஞ்செவிக் குறுமுயல் ' என்று வருணித்து, அது வைக்கோற்போரில் சென்று ஒதுங்கும் கிலேயினையும்,

தொ.-3