பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

மக்கள் தங்கள் வாழ்க்கையைச் செம்மையாக நடத்து தற்குத் தங்கள் மனம் விரும்பும் பல்வேறு தொழில் களே மேற்கொண்டு வாழ்ந்து வந்தார்கள் ; வாழ்ந்தும் வருகின்ருர்கள். அவ்வாறு மேற்கொண்ட தொழி லுடன், கவி பாடும் ஆற்றலும் பெற்றுக் கண்ணியமாய் வாழ்ந்த புலவர் பலர் நம் தமிழகத்தில் இருந்திருக்கின் னர். இங்ங்னம் தொழிலும் புலமையும் கொண்டு திகழ்ந்த பெரியோர்களேப் பற்றி எழுதப்பட்டதனல் இந்நூல் தொழிலும் புலமையும் என்னும் பெயரினைத் தாங்கியுள்ளது. இந்நூல் புறநானூறு என்னும் நூலேயே பெரிதும் அடிப்படையாகக் கொண்டு எழுதப் பட்டுள்ளது.

இத்தகைய கருத்துக்களை மாணவ உலகம் பயிலு மேல், அது சிறந்த வாழ்வினேப் பெறும் என்பதில் ஐயம் இல்லை.

அம்மையப்பர் அகம் 77, அவதானம் பாப்பையர் வீதி, குளே, சென்னே-7

1—9–55

ஆசிரியர்