பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. வடமவண்ணக்கன்

பெருஞ்சாத்தனுர்

சாத்தன் என்பது ஒரு தெய்வத்தின் பெயர். இத்தெய்வப் பெயர் பூண்ட புலவர் பலர் நம் தமிழ் நாட்டில் இருந்திருக்கின்றனர். நம் முன் னேர் இயற்பெயராகிய சாத்தன் என்பதற்கு முன் சில அடைமொழிகளைச் சேர்த்தே இப் பெயருடைய புலவர்களேக் குறிப்பிட்டு வந்தனர். அந்த முறையில் இங்குக்குறிப்பிடப்படும்புலவர் பெருஞ்சாத்தனர் என்பவர் ஆவர். இவர்க்கு அமைந்த அடைமொழிச் சிறப்பால் இவர் பெருமை பெற்றவர் என்பது புலகிைறது. அப் பெருமை இவர்க்கு எக்காரணம் பற்றி வந்தது என்பதை அறுதியிட்டு உறுதியாகக் கூற இய லாது. அப்பெருமை கல்வி காரணத்தாலோ, அல்லது இவர் மேற்கொண்ட தொழிற்காரணத் தாலோ, மற்று யாதாலோ, அறிந்துகொள்ளு தற்கு இல்லே. இவர் மேற்கொண்ட தொழில் நாணயப் பரிசோதனைத் தொழிலாகும். " இந் நாணயம் நல்ல தங்கத்தால் இயன்றதா, நல்ல வெள்ளியால் அமைந்ததா? அரசாங்க முத்திரை அமையப் பெற்றுச் செலாவணிக்குத் தகுதி யுடையதா, இது பொய்ந்நாணயமா ? என்பன போன்ற பரிசோதனைத் தொழிலே மேற்