பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T861 கொண்டவர் ஆவர். இதல்ை இவர் அரசாங் கத்தில் தொழில் புரிந்தவர் என்று கருதலாம்.

‘இவர் இத்தொழிலினை மேற்கொண்டவர் என்பது எப்படித் தெரிகிறது ? என்று நீங்கள் கருதலாம். இது வண்ணக்கன் என்று இப்புல வர் பெயர்க்கு முன் அமைந்த அடைமொழியால் அறியப்படுகிறது. வண்ணக்கன் என்னும் சொல்லுக்கு நாணயப் பரிசோதகன் என்ற பொருளினை உரை ஆசிரியர் எழுதியிருக்கின்ற னர். இதனை இப்பொருளில் காண விழைவார் ஐஞ்சிறுகாப்பியங்களுள் ஒன்ருகிய நீலகேசி என் னும் நூலின் உரையில் கண்டு உணர்வாராக. பெருஞ்சாத்தனர் நாணயப் பரிசோதகர் பணி பின்மேற்கொண்டவர் என்ப்தை உண்ர்ந்தோம். இக்காலத்தில் நாணயப் பரிசோதகரை கோட் டக்காரர்' என்று வழங்குவதையும் இந்தத் தரு ணம் நினைவில் கொள்ளுதல் பொருத்தமாகும், இன்னமும் இவருடைய பெயரைப் பற்றிய ஒரு குறிப்பினையும் நாம் உணர வேண்டியவர்களாய் உள்ளோம். அதாவது, இவர் வடகாட்டினின்று தென்னுட்டிற்கு வந்து சேர்ந்த புலவர் என்ப தாகும். இந்தக் குறிப்பு இவர் வண்ணக்கன் பெருஞ்சாத்தனர் என்ற அளவில் குறிப்பிடப் பெருமல், வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனர் என்று குறிப்பிடப்பட்டிருத்தலால் புலகுைம். வடமன் என்னும் சொல் வடதிசையிலிருந்து வந்தவன் என்னும் பொருளேயுடையது.