பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடுத்தாற்போல நாம் காண வேண்டுவது வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனர் ஒரு புல வர் என்பதாகும். இவர் புலவர் என்பதற்கு அடையாளம் இவரது பாடல் புறநானூற்றில் காணப்படுவதே அன்றி வேறன்று. அப்புற நானூற்றிலும் இவரால் பாடிய ஒரே பாட்டு மட்டும் காணப்படுகிறது. அப்பாட்டுத் தேர் வண் மலையனைப் பற்றி இவர் பாடிய பாட லாகும்.

தேர் வண்மலையன் என்பவன் சிறந்த வீரன். ஒருமுறை சோழன் இராச சூயம் வேட்ட பெரு நற்கிள்ளிக்கும், சேரமான் மாந்தரஞ்சேரல் இரும் பொறைக்கும் நடந்த போரில், தேர்வண் மலே யன், சோழன் இராச சூயம் வேட்ட பெருநற் கிள்ளியின் சார்பில் நின்று சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறையோடு பொருது அவனே வென்றவன். இதல்ை இத்தேர் வண்மலேயன் சிறந்த வீரன் என்பது புலப்படுகிறதல்லவா? இவ்வீரன் கொடைக்குணத்திலும் சிறந்திருந்த வன் என்பதை வண்மலையன் என்ற பெயர் அறி வித்து நிற்கிறது. இவனைப் பற்றிப் பெருஞ் சாத்தனர் என்ன கூறியுள்ளார் என்பதை நாம் படித்து அறிந்துகொள்ளுதல் இன்றியமையா தது. இவன் பகைவரது வலியைத் தொலேத்த வலிய ஆண்மையுடையவன் . அவ்வலியோடு தனது முயற்சியால் தேடிய பொருளேத் தானே உண்டு களித்து உறங்காமல் அதனே யாவர்க் கும் கொடுத்துத் தானும் உண்பவன். இத்