பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 38 J

தேர் வண்மலேயன் நட்பரசர்களாலும் பகை அரசர்களாலும் புகழப்பட்ட பெருமை சான் றவன். இவன் தன்னை அடைந்தோர்க்குப் பசி தீர உணவு அளித்து உபசரிப்பவன். இன் ைேரன்ன சிறப்புடையவன் என்று இப்புலவர் இவனைப் புகழ்ந்து பாடுகிருர்.

இப்புலவர் பாடலில் ஒர் அழகிய உவமை காணப்படுகிறது. அது நிலத்தை உழுத எரு தானது, உழுததனால் விளைந்த நெற்கதிர்களேத் தின்னமல், வைக்கோலே மட்டும் தின்பது போல, இவ்வீரனும் தன் முயற்சியால் வந்த பொருளேத் தான் முன் உண்ணுமல், பிறர்க்கு ஈந்து எஞ்சியதை உண்பவன் என்பது. இந்த அழகிய கருத்தைப் புலவர், "உழுத நோன்பகடு அழிதின்ருங்கு ’ என்று சுருங்கிய அடியில் விளங்க வைத்துள்ளார். முருகப்பெருமான் எப் படி அன்பர்களே அறிந்து அருள் செய்பவனயும் அசுரர்களே அழிப்பவனயும் இருக்கின்ருனே, அப்படி இத்தேர்வண்மலயன் நண்பர்க்கு உதவு வ்ோயுைம் பகைவர்க்குக் கூற்றுவனயும் இருந் தவன் என்பதை நன்கனம் விளக்கக் கருதிய பெருஞ்சாத்தனர், தேர் வண்மலேயனுக்கு முரு கப் பெருமானே ஒப்பாக மொழிந்துள்ளார். இதனை இப்புலவர்,

  • திருத்தகு சேஎய்கின் பெற்றிசி ஞேர்க்கே. ”

என்று குறிப்பிட்டுள்ளார்.