பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. வடம வண்ணக்கன் பேரி சாத்தனுர்

இப்புலவர் பெருந்தகையாரும் கோட்டத் தொழிலே மேற்கொண்டவர் ஆவர். அதாவது, நாணயப் பரிசோதகர் பணியினைத் தம் வாழ் நாள் பணியாகக் கொண்டவராவர். இவ்வறிஞ ரும் வடகாட்டினின்றும் தென்னடு வந்து வாழ்வு நடத்தியவர். இந்தக் குறிப்புக்கள் யாவும் இவரது பெயர்க்கு முன்னுள்ள வடம வண் ண்க்கன் என்னும் அடைமொழிகளால் அறியப் படுவனவாகும். வடம வண்ணக்கன் என் னும் தொடருக்குப் பொருள் விளக்கம் இங்குக் கூற வேண்டுவதில்லை. இத்தொடர்ப் பொருள் முன்னரே விளக்கப்பட்டுவிட்டது. இனி, நாம் இப்புலவர் பெருமான் பெயரைப் பற்றி ஆராய வேண்டுவது யாதெனில், இவரது இயற்பெய ராகிய சாத்தனர் என்னும் பெயர் முன் பேரி என்னும் அடைமொழி இருப்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டுவதே.

பேரி என்பது ஒரு வாத்தியம். இது தோற் கருவி, துளேக் கருவி, நரம்புக் கருவி, கஞ்சக் கருவி என்று கூறப்படும் வாத்தியக் கருவிகளுள் தோற்கருவியாகிய இயத்தைச் சேர்ந்ததாகும். இப்பேரி ஈண்டு முழவு என்ற பொருளில் ஆளப்