பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[41] பட்டுள்ளது. முழவாவது, இக்காலத்தில் நாம் காணும் மத்தளமாகும்.

பேரி சாத்தனர் கடலின் ஒலியைச் சிறப்பிக்க எண்ணினர் . அவ்வொலியினே உவமை வாயி லாக உரைக்க விரும்பினர் . அவ்வொலிக்கு உவமையாக முழவின் ஒலியைக் கூறியுள்ளார். இல்வாறு இவர் கூறியுள்ளதை, நற்றிணேயில் இவர் பாடியுள்ளதாகச் சேர்க்கப்பட்ட பாடலில், " தெண்கடல், முழங்குதிரை முழவின் பாணி யில் ' என்ற அடியில் காணலாம். இவ்வாறு இப்புலவர், கடல் ஒலிக்கு முழவின் ஒலியினை உவமை கூறிய காரணத்தால், இவர் பேரி சாத்தனர் என்று சிறப்பிக்கப்பட்டனர் என்று நாம் கருத இடமுண்டு. இவ்வாறு தாம் பாடிய பாடல்களில் ஏதேனும் அரிய குறிப்புத்தோன்ற ஒர் அடைமொழியினே அமைத்துப் பாடியிருப் பாராயின், அவ்வடைமொழி காரணமான பெயரே தம் பெயராக வழங்கப்பட்டு வரும் பேறு பெற்ற புலவர் நம் தமிழகத்தில் உண்டு. இதற்குதாரணமாகப் புலவர் பலர் பெயர்களே எடுத்துக் காட்டலாம் எனினும், ஒருவர் பெய ரைக் காட்டுதலே போதுமானதாகும். அவர் இரும்பிடர்த் தலையார் என்பவர். அவர் யானே யின் பிடரை இரும்பிடர்த் தலே என்று சிறப் பித்தமையில்ை இப்பெயர் பெற்ருர். எனவே, வடம வண்ணக்கன் பேரி சாத்தனர் என்னும் முழுப் பெயர்க்கும் காரணம் கண்டோம். இனி.