பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இப்புலவரைப் பற்றிய ஏனைய சிறப்புக்களையும் நாம் உணர்தல் வேண்டும்.

வடம வண்ணக்கன் பேரி சாத்தனர் புலவர் என்பதற்குச் சான்று, இவர்தம் பாடல்கள் அக நானூறு, புறநானூறு, குறுந்தொகை, கற்றிணே ஆகிய தொகை நூல்களில் சேர்க்கப்பட்டிருப் பதேயாகும். நாம் ஈண்டுப் புறநானூற்றில் இவர் பாடியுள்ள பாடற்கருத்தினை மட்டும் பார்ப்போம் :

இப்புலவர் பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய கன்மாறன் என்பானைப் பாடியுள்ளார். இப்பாண்டியன் தமிழ் நாட்டு மன்னர்களுள் மேம்பட்டு விளங்கியவன். இவன் புலவர் பல ராலும் பாடப்பட்ட பெருமை மிக்கவன். இவனே இடைக்காடனர், ஆவூர் மூலங்கிழார், நக்கீரனர் போன்ற புலவர் பெருமக்கள் பாடியுள்ளார்கள். இவன் நல்ல வள்ளன்மைப்பண்பும், பகைவரை வெல்லும் ஆற்றலும் படைத்தவன். செங்கோல் செலுத்தி நாட்டை ஆண்ட நல்லரசன். இவன் தன் காட்டைக் கண்ணும் கருத்துமாக ஆட்சி செய்த முறைமையைப் புலி தன் குட்டியைப் பாதுகாப்பது போலத் தன் நாட்டை ஆண்டு. குடி மக்களைக் காப்பவன் என்று புலவர் கூறிச் சிறப்பித்துள்ளார். இவ்வுவமையால் இவன் பால் அன்பும் வீரமும் ஒருங்கே அமைந்த நிலைமை புலப்படுகிறது.