பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| F5 J

புலிபுறம் காக்கும் குருளை போல

மெலிவில் செங்கோல் நீபுறம் காப்ப”

என்பன இவன் ஆட்சியின் சிறப்பைக் காட்டும் அடிகள்.

இப்பாண்டியன் முடியுடை மூவேந்தருள் மேம் பட்டவன் என்பதை மகிழ்வுடன் கூற வந்த புலவர், இறைவன் நெற்றிக் கண் போல மேம் பட்ட பூ மாலையுடையவன் என்று சிறப்பித்த தல்ை நன்கு உணரலாம்.

' பிறைநுதல் விளங்கும் ஒருகண் போல

வேந்துமேம் பட்ட பூந்தார் மாற!”

என்னும் அடிகளே இதனை விளக்கி நிற்கும்.

இம்மன்னனது புகழினைப் புலவர் பிறர் கூறி யுள்ள பாடல்களிலும் பரக்கக் காணலாம். இத் தகைய பெருமை சான்ற நன்மாறனேப் பேரி சாத்தனர் எம்முறையில் பாடியுள்ளார் என்பதை இங்குக் கவனிப்போம். இனி வரும் கருத்துக்கள் பேரி சாத்தனர் இலவந்திகைத்துஞ்சிய நன்மாற னேப் பற்றிக் கூறிய கருத்துக்களாகும்.

நன்மாறனுக்கு வாய்த்த மனேவி கற்புடை நல் லாள். அவள் கடவுள் சான்ற கற்பின் சேயிழை என்று போற்றப்படுகிருள். இம்மன்னன் பிள்ளைப் பேற்றையும் பெற்ற பெருந்தகை. இது இப்புலவர் வாழ்த்தும் முறையிலிருந்து அறியப் படுகிறது. இப்புலவர் இம்மன்னனே வாழ்த்தும்