பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[44]

போது இம்மன்னன் புதல்வர்களேயும் உளமார வாழ்த்துகிருர். அப்புதல்வர்கள் இங்கன் மாறன் முன்னேர்களைப் போலத் தாட்சணியம் உடையவர்களாய் வாழ்வார்களாக என வாழ்த் துகிருர். இந்த அளவிலும் தம் வாழ்த்துரையினே இவர் நிறுத்தவில்லை. நன்மாறன் பெற்ற பிள்ளைகளும், பிள்ளைகளைப் பெற்று வாழ வேண் டும் ! என்று கருதி வாழ்த்துகிருர், “ இப் பேரர்களேக் கண்டு களிக்கும் அளவுக்கு இந் நன்மாறன் நீண்ட ஆயுளைப்பெற்று விளங்குவா கை!" என்று கூறி இவனது வாழ்நாள் வளர் வதை இப்புலவர் மிகவும் விரும்பியிருக்கிருர், இதனை இப்புலவர் வாழ்த்துரைகளாகிய,

  • பெருங்கடல் நீரினும் அக்கடல் மணலினும்

நீண்டுயர் வானத்து உறையினும் நன்றும் இவர்பெறும் புதல்வர்க் காண்தொறும் நீயும் புகன்ற செல்வமொடு புகழ்இனிது விளங்கி கீடு வாழிய நெடுந்தகை !” -

என்னும் இவ்வடிகளிற்காணலாம்.

'நீ இவ்வாறு கடல் நீரைவிடவும், கடல் மணலேவிடவும், வானத்தின் மழைத்துளியை விடவும் பல நாள்களைப் பெற்றுச் செல்வச் சிறப் புடன் வாழ்ந்தால் நானும் பலநாள் வாழ்வேன்,' என்று கூறும் இவர் வார்த்தைகள் இன்பம் தரும் வார்த்தைகளாகும். இப்புலவர் இங்கன்மாறனது பொருட்கொடையினை நச்சியிருந்தார் என்பது இவர் குறிப்பிடும் உவமையால் விளங்குகிறது.