பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. வடம வண்ணக்கன்

தாமோதரனுர்

தாமோதரனர் என்னும் புலவரும் நாணயப் பரிசோதகத் தொழிலினை மேற்கொண்டவரே. இவரும் வடநாட்டினின்றும் தென்னாட்டிற்குவந்து குடியேறியவர் ஆவர். இவ்விரண்டு குறிப்புக் களையும் இவர் இயற்பெயராகிய தாமோதரனர் என்னும் பெயர்க்கு முன்னர் அமைந்த அடை மொழிகளே நமக்கு அறிவுறுத்தி நிற்கின்றன. இவ்வடைமொழிகளின் பொருள் பெருஞ்சாத் தனர் என்னும் புலவர் பெருமகனரைப் பற்றிக் கூறியிருக்கும் இடத்தில் நன்கு விளக்கப்பட் டுள்ளது.

இப்புலவரின் பெற்ருேர் சிறந்த திருமால் பத்தராய் இருக்க வேண்டும். இதனே இப்புலவர் கொண்டுள்ள பெயர் மூலமாக உணர்கிருேம். தாமோதரனர் என்பது திருமாலுக்குரிய பெயர் களுள் ஒன்று. தாமோதரன் என்ற பெயர் திருமாலுக்கு அமைந்து வருதலே நாலாயிர திவ் வியப் பிரபந்தத்தில் பல இடங்களிற் காணலாம். காண விழைவார் ஆண்டுக் கண்டு இன்புறலாம். திருமகள் கேள்வனம் திருமாலின் திருப்பெயரை இப்புலவர் தம் இயற்பெயராகக் கொண்டிருத்.