பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலின், இவர் திருமால் நெறியினர் என்பதை நாம் உளம் கொளல் வேண்டும்.

இப்புலவர் பெருமானர் செய்யுள் இயற்றிப் புலவர் வரிசையில் அமைந்த புலமை மிக்கவர் என்பது, இவர் பாடல் புறநானூற்றிற் காணப் படுவதன் மூலம் அறிய வரும் செய்தியாகும். இவர் ஒரே பாடலைத்தான் பாடியிருக்கிருர், அப்பாடல் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது. அப்பாடல் பிட்டங்கொற்றன் என்பவன்மீது பாடப்பட்டதாகும்.

பிட்டங்கொற்றன் என்பவன் குதிரை மலேக் குத் தலைவன். இவன் சிறந்த வீரன். இவன் வீரனப் இருந்த காரணத்தாலேதான் சேர மன்னனது சேனேயின் தலைவனயும் இருக்க நேர்ந்தது. இவன் சிறந்த கொடையாளியும் ஆவன். இவன் புலவர்களால் பாடப்பெறும் பீடும் பெற்றவன். இவனைப் பாடிய புலவர்கள் கருவூர்க் கந்தப்பிள்ளை சாத்தனர், காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணளுர், உறையூர் மருத்துவன் தாமோதரனுர் என்பவர் ஆவர்.

இவனது நாட்டில் மக்கள் உணவுக்குக் குறை வின்றி உண்டுவாழ்ந்தார்கள். இவனதுகொடை, கொடைக் குணம் இல்லாதவரை நாணச் செய் தது என்று சிறப்பிக்கப்பட்டது. அதாவது, அந்த அளவுக்குப் பெருங்கொடை புரிந்தவன் இவன் என்பது பொருள். இவன் தன் படை